மும்பை: வங்கி அல்லாத நிதி நிறுவனமான எல்&டி ஃபைனான்ஸ், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 701 கோடியாக இருந்த அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், ஜூன் காலாண்டில் 29 சதவீதம் அதிகரித்து ரூ. 902 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10.22 சதவீதமாக இருந்த தனது வட்டி வருமான விகிதம் மற்றும் கட்டண வருவாய், இக்காலாண்டில் 10.47 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தது.கடன் வசூல் அமைப்பு மேம்படுத்தப்பட்டதாலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகள் பயன்படுத்தப்பட்டதாலும், நிறுவனத்தின் கடன் தொடர்பான செலவுகள் 2.54% இலிருந்து 0.89% ஆக குறைந்துள்ளது.நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடன் வழங்கல் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 27 சதவீதம் அதிகரித்து ரூ. 1.29 லட்சம் கோடியாக உயர்ந்ததுள்ள வேளையில் சில்லறை கடன் விநியோகம் 36 சதவீதம் அதிகரிப்பு.மும்பை பங்கு சந்தையில், நேற்றைய வர்த்தகத்தில், நிறுவனத்தின் பங்குகள் 0.06 சதவீதம் உயர்ந்து ரூ. 321.05 ஆக வர்த்தகமானது.L&T Finance on Friday reported a 29 per cent jump in its June quarter.காலாண்டு வருவாய் எதிரொலி: டிசிஎஸ் பங்குகள் 4% உயர்வு!