ஒரு கோல்கூட அடிக்காமல் ஆட்ட நாயகன் விருது வென்ற லாமின் யமால்..! எப்படி?

Wait 5 sec.

பெல்ஜியம் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என வென்றது. இந்தப் போட்டியில் லாமின் யமாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் திடலில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு பெல்ஜியம் - ஸ்பெயின் அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதின. இதில் ஸ்பெயின் அணியின் ஃபேபியன் ரூயிஸ் 30ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, பெல்ஜியம் அணியின் சார்லஸ் டி கெட்டலேரே 41ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்பின்னர், இரண்டாம் பாதியில் மைக்கல் மெரினோ 88ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து ஸ்பெயினை 2-1 என வெற்றி பெற செய்தார்.இந்தப் போட்டியில் கோல் அடிக்காத லாமின் யமாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஒரு கோல்கூட அடிக்காத இவருக்கு எப்படி ஆட்ட நாயகன் விருது வழங்கலாம் என சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்தப் போட்டியில் லாமின் யமால் எதிரணியின் பாக்ஸிற்குள் அதிகமுறை (12) பந்தைத் தொட்டிருந்தார். அதிகமாக 6 முறை ஷாட் அடித்திருந்தார். அதிகபட்ச டிரிபிளிங் (4) செய்திருந்தார். நீண்ட தூர பாஸ்களில் இரு முறையும் வென்றிருந்தார். 16ல் 9 முறை டூயல்ஸில் வென்றார். 4 முறை பந்தை எதிரணியிடம் இருந்து மீட்டார். இந்தக் காரணங்களால் லாமின் யமாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதேபோல் முன்னதாகவும் லாமின் யமாலுக்கும் ரோட்ரிக்கும் ஆட்ட நாயகன் விருது இந்த உலகக் கோப்பையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Lamine Yamal earns the Superior Player of the Match trophy. #FIFAWorldCup #SuperiorPOTM pic.twitter.com/fhH91Ws0ES— FIFA World Cup (@FIFAWorldCup) July 10, 2026ஸ்பெயினைப் பார்த்துதான் பிரான்ஸ் பயப்படும்: லாமின் யமால்Lamine Yamal earns the Superior Player of the Match trophy without goal scoring