வியத்நாம் படகு விபத்து! பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் யார் யார்? முழு விவரம்...

Wait 5 sec.

வியத்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலா இடமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 ஊழியர்களும் இருந்தனர். இன்று காலை 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வியத்நாம் படகில் சென்ற 32 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. படகில் சென்றவர்கள் (பெயர் - தந்தை பெயர்) 1. பாலசுப்ரமணி - பழனிசாமி2. செல்வம் - பிச்சையா3. செந்தில் குமார் - ஜெயவேல்4. சிவகுமார் - முத்துக்குமாரசாமி5. நிர்மல் குமார் - சேதுராமன்6. முருக பிரபு - ஆறுமுகம்7. ரூபன் செல்வ நாதன் - ஜேக்கப் யேசுபாதம்8. ஸ்ரீதர் - தர்மராஜன்9. விக்னேஷ்வர் - ராதாகிருஷ்ணன் கோபால்10. ராமசுப்பு - அண்ணாவி11. அபுதல்கா - ஜாஹிருதீன்12. ஸ்ரீதர் - சுந்தர்ராஜன்13. வம்ஷீதர் - செல்லூர் ராம்ராஜ்14. செஞ்சடைவேல் - குப்புசாமி15. நாகலமடுகு - சோஹன்16. நல்லபேட்டை ஆதிசேஷய்யா - ரவிதேஜா 17. ஷேக் அப்துல்லா - அப்துல் மஜீத்18. ராஜீவ் - கலைவாணன் 19. பாலாஜி - நடேசன்20. வினய குமார் - சித்தாபுரம் பாஸ்கரா21. ரவிசங்கர் - சுகுமாரன்22. விபுல் - உத்தம் சந்த்23. சந்தோஷ் குமார் - சாந்திலால்ஜெயின் 24. பாபு - குப்புசாமி25. அழகுராஜன் - சிவசாமி26. வசந்த குமார் - ஆனந்தன்27. ஸ்ரீதர் - முடியம்28. ஜெய லக்ஷ்மி - கெல்லி29. கிஷோர் - கெல்லி30. அவிகோட் செரியன் தாமஸ் - தாமஸ்31. லோவெனி - தாமஸ்32. ரமேஷ் குமார் - பேச்சியப்பன்தமிழர்கள் இந்த பட்டியலில் தமிழ் பெயர்கள் அதிகமாக இருக்கின்றன. விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களில் 10 -க்கும் அதிகமானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருக பிரபு என்பவர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் 2 நாள்களுக்கு முன்பாக தனது நண்பருடன் வியத்நாம் சென்றுள்ளார். உயிரிழந்தவர்கள் யார் யார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதுபற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாக வியத்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கவும் அவர்களது உறவினர்களைத் தொடர்புகொள்ளவும் தூதரக அதிகாரிகள், வியட்நாம் நாட்டு அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி ஆய்வு செய்து வருகின்றனர். As per information received from official sources, the following 32 Indian tourists were onboard the boat which capsized near Phu Quoc Island in Vietnam a few hours ago. We are ascertaining further details of casualties and would update soon.@cghcm pic.twitter.com/geddttdpWB— India in Vietnam (@AmbHanoi) July 11, 2026உதவி எண்கள் அறிவிப்பு வியத்நாம் படகு விபத்து தொடர்பாக ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள +84 91 308 9165 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. In a tragic incident, a boat carrying several Indian tourists has capsized near Phu Quoc Island in Vietnam a few hours ago. Exact details of the incident are being ascertained as search and rescue operations by local authorities are ongoing. In order to provide information…— India in Vietnam (@AmbHanoi) July 11, 2026Vietnam boat accident: Man from Palani killed, Who are the 32 people travelled?வியத்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்