சூரியப் புயலில் சிக்கி தொடர்பு இழந்த இந்திய தனியார் செயற்கைக்கோள்!

Wait 5 sec.

சக்திவாய்ந்த சூரியப் புயலில் சிக்கிய இந்திய தனியார் நிறுவனத்தின் ‘ஆப்டோசாா்’ என்ற செயற்கைக்கோள் பூமியுடனான தொடர்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகம் மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த கேலக்ஸிஸ்ஐ புத்தாக்க நிறுவனமானத்தால் ‘திருஷ்டி’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட முதன்மை செயற்கைக்கோளான ‘ஆப்டோசாா்’, கடந்த மே 3 ஆம் தேதி அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.190 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைக்கோளான ‘ஆப்டோசாா் ’ஒரு இந்திய தனியார் நிறுவனத்தால் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகும். மின்-ஒளியியல் (எலக்ட்ரோ-ஆப்டிகல்) சென்சாா் மற்றும் செயற்கை துளை ரேடாா் சென்சாா் ஆகிய இருவேறு பிம்பமாக்கல் தொழில்நுட்பங்களையும் ஒரே செயல்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைக்கும் செயற்கைக்கோள் ஆகும்.‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு வெற்றிகரமாக அதனுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், ஏவுதல் மற்றும் ஆரம்ப சுற்றுப்பாதை கட்டத்தின் (LEOP) இறுதிக் கட்டத்தில் அதனுடனான தொடர்பு விட்டுவிட்டு கிடைத்ததாகவும், பின்னர் முற்றிலும் துண்டிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.முதல்கட்ட ஆய்வில், புவிகாந்த சூரியப் புயலில் சிக்கி, அதன் கதிர்வீச்சு விளைவுகளால் செயற்கைக்கோளில் உள்ள ஒரு முக்கிய அமைப்பு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளுடனான தொடர்பை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தாலும், சாத்தியக்கூறு குறைவாகவே இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.Indian private satellite loses contact after getting caught in a solar storm!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! என்ன செய்யப் போகிறார் மேயர் பிரியா?