உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்லஜ் திரைப்படம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.பஞ்சாபில், கடந்த 1985 - 1995 வரை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு 25 ஆயிரத்துக்கும் அதிகமான சீக்கியர்களை இந்திய படைகள் படுகொலை செய்ததாக, சட்லஜ் திரைப்படத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அவலங்களை வெளி உலகிற்குக் கொண்டு வந்த பஞ்சாபைச் சேர்ந்த மனித உரிமைகள் போராளி ஜஸ்வந்த் சிங்கின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படம் “சட்லஜ்”. இயக்குநர் ஹனி ட்ரெஹான் இயக்கத்தில் நடிகர்கள் தில்ஜித் தோசாஞ்ச், அர்ஜுன் ராம்பால், கன்வாலிஜித் சிங், சுவிந்தர் விக்கி, கீத்திக்கா வித்யா ஒஹ்லியான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தப் படத்தைத் திரையரங்குகளில் வெளியிட அரசு அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜி5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட “சட்லஜ்” படம் வெறும் 2 நாள்களிலேயே நீக்கப்பட்டது. காலிஸ்தான் அமைப்பு மற்றும் அதற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து இந்தப் படம் பேசியது இணையத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியது. இந்த நிலையில், ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பெருமளவில் கவனம் பெற்று வரும் சட்லஜ் திரைப்படத்தை பஞ்சாப், தில்லி, ஹரியாணா, ஜம்மு மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள ஏராளமான சீக்கிய மத வழிபாட்டுத் தலங்களில் இந்தப் படத்தைத் திரையிடுவதற்கு அங்குள்ள சீக்கிய அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஓடிடியில் வெளியான ராம் சரணின் பெத்தி!The film *Sutlej*, based on true events, has become a major topic of discussion on the internet.