தொடரும் கட்சித்தாவல்! திரிணமூல் முன்னாள் எம்.பி.க்கள் மூவர் பாஜகவில் ஐக்கியம்!!

Wait 5 sec.

திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை முன்னாள் எம்.பி.க்கள் சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பராக் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மமதா ஆதரவு அணி, அதிருப்தி அணி என கட்சி இரண்டாகப் பிரிந்தது. இதையடுத்து, மமதா பானர்ஜியின் ஆதரவுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்த பலரும் பாஜகவில் சேர்ந்தனர். மேலும், திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா பானர்ஜி நீக்கப்பட்டு புதிய தலைவராக ரிதப்ரதா தேர்வு செய்யப்பட்டார்.இந்த நிலையில், மமதா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக அவரது ஆதரவு மாநிலங்களவை முன்னாள் எம்பிக்கள் சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பராக் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.சால்ட் லேக்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா முன்னிலையில் சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பராக் ஆகியோர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.முன்னதாக, மேற்கு வங்க தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் உள்பட பலரின் ராஜிநாமாக்கள் தொடரும் என்று பாஜக தலைவரும் மேற்கு வங்க அமைச்சருமான திலிப் கோஷ் கடந்த ஜூலை 5 ஆம் தேதி தெரிவித்திருந்தார். அதேபோல், சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பராக் ஆகியோர் கடந்த மாதம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அக்கட்சியிலிருந்தும் விலகியிருந்த நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர்.Former Trinamool Congress Rajya Sabha MPs Sushmita Dev, Sukhendu Sekhar Ray, and Prakash Chik Baraik joined the Bharatiya Janata Party in West Bengal's capital, Kolkata, on Thursday.