சமூகநீதியின் முன்னோடி, ஒடுக்கப்பட்டவர்களின் குரல் இரட்டைமலை சீனிவாசன்! முதல்வர் விஜய் புகழாரம்

Wait 5 sec.

சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்தவர் இரட்டைமலை சீனிவாசன் என அவரது பிறந்தநாளில் முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். விடுதலை போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, வெங்கடரமணன், மரியவில்சன், வன்னி அரசு, குமார் ஆகியோரும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன். கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்கிறது. அவரது உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார். சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய…— CMOTamilNadu (@CMOTamilnadu) July 7, 2026Rettaimalai Srinivasan was a pioneer of social justice: Chief Minister Vijay X post for tribute to himஅமைச்சர்கள் ரீல்ஸ் போடுவது வாடிக்கையாகிவிட்டது! திருமாவளவன்