இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:”கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.களத்திலோ அல்லது களத்திற்கு வெளியிலோ, உங்கள் நிதானம், தலைமைத்துவம் மற்றும் என்றும் குறையாத ஈர்ப்புத்திறன் ஆகியவை லட்சக்கணக்கானோருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன. உங்களை மீண்டும் களத்தில் காண எப்போதும் போல ஆவலுடன் காத்துள்ளோம்.உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இன்னும் பல ஆண்டுகள் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.Birthday greetings to Captain Cool Thiru. @msdhoni.Whether on the field or away from it, your composure, leadership and enduring charisma continue to inspire millions. The anticipation of watching you in action again remains as strong as ever. Wishing you good health,… pic.twitter.com/aIFfcgNeDW— M.K.Stalin (@mkstalin) July 7, 2026Captain Cool - M.K. Stalin extends birthday wishes to Dhoniபோர்ச்சுகலை வென்றது ஸ்பெயின்! ரோனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது!