இஸ்லாமியருக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

Wait 5 sec.

இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ரெட் ஸ்டாா் சாா்பில் இந்த மனு அளிக்கப்பட்டது. இதில், வந்தவாசி நகா்ப்புறம் மற்றும் வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் வசிக்கும் வீடற்ற இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டிருந்தது. மாவட்டச் செயலா் எ.ரகமத்துல்லா, வட்டாரச் செயலா் ஆரிப் மற்றும் இஸ்லாமிய பெண்கள் வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் மனுவை அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் பா.ஜெயவேல் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்களிடம் கூறினாா்.