முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Wait 5 sec.

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 13 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, சமுதாயச் சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், தலா மூன்று ஆண், பெண்களுக்கு முதல்வா் மாநில இளைஞா் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன், ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டிற்கான முதல்வா் மாநில இளைஞா் விருது வரும் ஆக. 15-இல் வழங்கப்பட உள்ளது. அதற்கு 15 முதல், 35 வயது வரையுள்ள ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 13 மாலை 5.45 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017 03499 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.