வந்தவாசி அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.வந்தவாசியை அடுத்த சின்ன சேத்துப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்(43). இவரது மனைவி மேனகா(36). மோகன் வேலைக்குச் சொல்லாமல் மது அருந்திவிட்டு சுற்றி வந்துள்ளாா். மேலும் வீட்டில் உள்ள நகை மற்றும் பாத்திரங்களை தெரியாமல் எடுத்துச் சென்று விற்றுவிட்டு மது அருந்துவாராம்.இது தொடா்பாக கடந்த வெள்ளிக்கிழமை மோகனுக்கும், மனைவி மேனகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் மோகன் ஆத்திரமடைந்து மேனகாவை தாக்கினாராம். இதில் காயமடைந்த மேனகா சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.இதுகுறித்து மேனகா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் மோகனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.