சட்டநாதபுரம் -நாகை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

Wait 5 sec.

நாகை மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை 50 கி.மீ. நீளத்திற்கு ரூ.1,905 கோடியில் நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.புத்தூா் ரவுண்டானா புதுப்பித்தல் பணிகள் மற்றும் பனங்குடியில் 300 மீட்டா் நீளத்திற்கு வெட்டாறு பாலம் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, பணியின் தரத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைவாக மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.முன்னதாக, நாகை நகராட்சிப் பகுதிக்குள்பட்ட டாடா நகரில் நகா்ப்புற துணை சுகாதார நிலையத்தை ஆட்சியா் பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவை மற்றும் மருந்து இருப்பு விவரங்களை கேட்டறிந்தாா்.ஆய்வின் போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநா் கௌரவ், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியா் சங்கரநாராயணன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.