புதுதில்லி: பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, நடப்பு நிதியாண்டில் வாராக் கடனை மீட்டெடுப்பதன் மூலம் ரூ. 5,500 கோடி வரை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.முதல் காலாண்டில் ரூ. 1,885 கோடி மீட்டெடுக்கப்பட்ட நிலையில், 2026-27 நிதியாண்டில் ரூ. 4,500 கோடி முதல் ரூ. 5,500 கோடி வரை திரட்டத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பினோத் குமார் தெரிவித்தார்.இதில், தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் முன் விசாரணையில் உள்ள வழக்குகளிலிருந்து, நடப்பு நிதியாண்டில் ரூ. 500 கோடியை மீட்டெடுக்கச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கி நம்பிக்கை தெரிவித்தது.கடந்த மாதம் தொடங்கப்பட்ட அந்நியச் செலாவணி வைப்புத்தொகை திரட்டும் முயற்சி குறித்துக் கேட்டபோது, ஜூலை 9ஆம் தேதி வரை வங்கி 140 மில்லியன் அமெரிக்க டாலரை திரட்டியுள்ளது என்றார்.வங்கியின் வைப்புத்தொகை திரட்டும் முயற்சிகள் குறித்துப் பேசிய பினோத் குமார், முதல் காலாண்டில் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகையில் 15.3 சதவீத வலுவான வளர்ச்சியை வங்கி பதிவு செய்ததாகத் தெரிவித்தார்.ஜூன் 2025 இறுதியில் ரூ. 2,77,116 கோடியாக இருந்த இந்த வைப்புத்தொகை, முதல் காலாண்டின் இறுதியில் ரூ. 3,19,525 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Indian Bank is targeting up to Rs 5,500 crore from the recovery of bad loans.மதிப்புமிக்க 4 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 92,995 கோடியாக அதிகரிப்பு!