இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் படத்தின் டீசர் வெளியானது.படத்தில் ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் 'கன்னகுழிக்காரா' என்ற பாடல் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.இந்தநிலையில், படத்தின் டீசர் வெளியான நிலையில், படத்தின் மற்ற பாடல்களும் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.