கண்ணீருடன் வெளியேறிய லூக்கா மாட்ரிச், நெய்மர், ரொனால்டோ..! மெஸ்ஸி மட்டுமே நீடிப்பு!

Wait 5 sec.

கால்பந்து உலகக் கோப்பையில் லெஜண்ட்ஸாக இருந்த லூக்கா மாட்ரிச், நெய்மர் ஜூனியர், கிறிஸ்டியானோ ரொனால்டோ தங்களது கடைசி உலகக் கோப்பையில் கண்ணீருடன் வெளியேறியுள்ளார்கள். கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் கடந்த ஜூன் 11 முதல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. 48 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பையில் இதுவரை காறுதிக்காக 6 அணிகள்தேர்வாகியுள்ளன. இந்த உலகக் கோப்பை பல லெஜண்ட்ஸுக்கு கடைசியாக இருக்கிறது. குரேஷியாவின் கேப்டன் லூக்கா மாட்ரிச் (40 வயது), பிரேசில் அணியின் கேப்டன் நெய்மர் (34 வயது), போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ (41 வயது), ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி (39 வயது) ஆகியோருக்கு இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கிறது. இதில் லூக்கா மாட்ரிச், நெய்மர் தங்களது ஓய்வை அறிவித்துவிட்டார்கள். ரொனால்டோ ஓய்வை அறிவிக்காவிட்டாலும் இதுதான் அவரது கடைசி உலகக் கோப்பையாக இருக்கிறது. இந்த ஜாம்பவான்கள் தங்களது கடைசி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியபோது கண்ணீருடன் வெளியேறினார்கள். இந்த உலகக் கோப்பை கால்பந்து ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது.ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி மட்டுமே இந்தப் பட்டியலில் மீதமிருக்கிறார். இன்றிரவு 9.30 மணிக்கு எகிப்துடன் விளையாடவிருக்கிறார். இதில் வென்றால் மெஸ்ஸியின் அணி காலிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் கார்டில் மோசடி செய்தும் தோல்வியுற்ற அமெரிக்கா..! கிண்டல் செய்த பெல்ஜியம்!Luka Modric, Neymar, and Ronaldo left in tears... Only Messi remains!