நீதிக் கதைகள்! அறிவார்ந்த தீர்ப்பு!

Wait 5 sec.

மைசூர் மாநகரத்தை திப்புசுல்தான் ஆண்டுகொண்டு இருந்தபோது அவரிடத்தில் ஒரு வழக்கு வந்தது. அவர் ஆளுகைக்கு உட்பட்ட ஓர் ஊரில் தேரோட்டம் நடந்தது. அந்தத் தேரோட்டம் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றது. தேர் சுற்றி வருகின்ற பாதையில் ஒரு மரக்கிளை. தேர் வருகின்ற பாதைக்குக் குறுக்கே வளர்ந்து தடுப்பது போன்று தடையாக நின்றது. தேரில் தெய்வத்தை வைத்து இழுத்து வந்தவர்கள், "அம்மரத்தின் கிளையை வெட்டிவிட வேண்டும்" என்றார்கள். ஆனால் அம்மரம் இருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், "அம்மரத்தில் ஒரு தெய்வம் குடி கொண்டிருப்பதாகவும், கிளையை வெட்டக்கூடாது...., தேர் மாற்றுப் பாதையில் செல்லட்டும்" என்று கூறினார்கள். தேரோட்டம் நின்று போனது. இரண்டு பிரிவினரும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான். நீதி வழங்க வேண்டிய திப்புசுல்தானோ இஸ்லாமியர். என்ன செய்யலாம்? என்று மன்னன் யோசித்தபோது அருகிலிருந்த அமைச்சர் ஒருவர், "நானாஜி என்ற முதியவர் இத்தகைய சிக்கலான வழக்குகளுக்குச் சரியான தீர்ப்பு வழங்குவார்" என்று சொன்னார்.உடனே திப்புசுல்தானும் மாறுவேடம் பூண்டு வழக்கினைக் கொண்டு வந்தவர்களோடு சேர்ந்து சென்று "நானாஜி'யைச் சந்தித்தார். நானாஜி வழக்கினை நன்கு ஆராய்ந்து இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்ப்பை வழங்கினார். தேர் இழுத்து வந்தவர்களை நோக்கி, "உங்களுடைய தேரின் உயரம் எவ்வளவு இருக்கும்?"என்று கேட்டார். அவர்கள், "பத்தடி" என்று சொன்னார்கள். உடனே மரத்தை வெட்டக்கூடாது என்று சொன்னவர்களையும் அழைத்தார். "கிளைகளையும் வெட்டக்கூடாது....தேரும் திரும்பக்கூடாது. தேர் செல்கின்ற அளவுக்குப் பத்தடி ஆழத்திற்கு நீண்ட பள்ளத்தை இருதரப்பினரும் சேர்ந்து வெட்டி ஒரு பாதை தயார் செய்யுங்கள்....தேர் பள்ளத்தில் இறங்கி மரத்தைக் கடந்த பிறகு தரையை சமதளமாக்கி விடுங்கள். தேர் எப்போதும் போலச் செல்லும். தெய்வம் இருக்கிறது என்று நீங்கள் நம்பும் மரக்கிளையும் காக்கப்படும்!" என்றார். இந்தத் தீர்ப்பைக் கேட்ட மன்னன் திப்புசுல்தான் மாறுவேடத்தைக் கலைத்துவிட்டு மற்றவர்களோடு வியந்து பாராட்டி, நானாஜிக்குப் பரிசும் அளித்தான். அறிவார்ந்த தீர்ப்பால் பெரிய கலவரம் தடுக்கப்பட்டது! A moral story that children should knowநீதிக் கதைகள்! தேவையில்லாத பயமே கவலைகளுக்குக் காரணம்!