உலகக் கோப்பை தோல்வி: நாடு திரும்பிய எகிப்து அணிக்கு உற்சாக வரவேற்பு!

Wait 5 sec.

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஆர்ஜென்டீனாவிடம் தோல்வியுற்ற பிறகு நாடு திரும்பிய எகிப்து அணிக்கு அதன் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் எகிப்து அணி 2-3 என்ற கோல்கணக்கில் தோல்வியுற்றது. அதிலும் 78 நிமிஷங்கள் வரை 2-0 என முன்னிலை வகித்தது. கடைசி 13 நிமிஷங்களில் ஆட்டமே மாறியது. இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய எகிப்து அணி நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவுடன் தோற்றாலும் பலரும் அந்த அணிக்கு ஆதரவு அளித்தார்கள். ஆஸ்திரேலியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் வென்று முதல்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் முன்னெற்றி சாதனை படைத்தது.விஏஆர் தலையீடு, ஃபௌல் என ஃபிஃபா ஒருதலைப்பட்சமாக நடக்கிறது எனவும் அநீதி இழைத்துவிட்டதாகவும் எகிப்து கால்பந்து கழகம் அறிக்கை விட்டிருந்தது. இந்த நிலையில், நாடு திரும்பிய இந்த அணிக்கு எகிப்து மக்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தார்கள். ஃபிஃபாவின் நடுவர் குழுத் தலைவர் பியர்லூய்கி கொலினா விதிமுறைகள் சரியாகவே பின்பற்றப்படுகின்றன என விளக்கம் அளித்தார்.Egypt welcomed home by thousands of fans after their World Cup exit ❤️ pic.twitter.com/JEwV45Sg2x— ESPN Africa (@ESPNAfrica) July 10, 2026தோல்வியிலும் மனம் கவர்ந்த மொராக்கோ..! பலம்வாய்ந்த பிரான்ஸை சமன்செய்தது எப்படி? Egypt''s soccer team gets a warm welcome home after World Cup loss