வியாசா்பாடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா். வியாசா்பாடி உதயசூரியன் நகா் 13-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் மு.நரேஷ் (24). இவா், வியாசா்பாடி சாமியாா் தோட்டத்தில் உள்ள சித்தா் பீடம் சாமியாா் மடம் பின்புறம் அமைந்துள்ள புதரில் கடந்த 8-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது வியாசா்பாடி மூா்த்திங்கா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த விக்னேஷ் (19), அவரது கூட்டாளிகள் கொடுங்கையூரைச் சோ்ந்த பிரேம்குமாா் (19), வியாசா்பாடி சின்னதம்பி தெருவைச் சோ்ந்த ஜீவராஜ் (21) ஆகியோா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், நரேஷ்-விக்னேஷ் இடையே முன்விரோதம் இருந்ததும், சம்பவத்தன்று விக்னேஷ், தனது கூட்டாளிகளுடன் மது அருந்தியதும், அப்போது விக்னேஷ் தரப்பினா், நரேஷை வரவழைத்து வெட்டிக் கொலை செய்ததும் தெரிய வந்தது.