பாஜகவை எதிர்க்கும் தவெகவும் திமுகவும் ஒரே அணியில் வரவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விசிக மண்டல செயற்குழுக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது, "நான் எங்கே சென்றாலும், தமிழ்நாட்டில் பாஜக வலிமை பெற்றுவிடக் கூடாது என்றும், ஆர்எஸ்எஸ் காலூன்றி விடக் கூடாது என்பதுதான் என்னுடைய கவலை.திமுக தோற்றுப் போனது ஒரு கவலை. அதனைவிட, நம் கண் முன்னேயே அதிமுகவை இப்படிச் சிதறடிக்கிறார்களே என்ற கவலையும்கூட.பாஜகவை கொள்கை எதிரி என தவெக கூறுகிறது. இவ்வளவு நாள்கள் எதிர்த்த திமுகவும் தொடர்ந்து எதிர்ப்பதாகக் கூறுகிறது. பாஜகவை எதிர்ப்பதுதான் அரசியல் என இந்தியா கூட்டணியும் சொல்கிறது. அப்படியெனில், ஏன் இவர்கள் அனைவரும் ஒரே அணிக்குள் வரக் கூடாது என்றுதான் நான் கேட்கிறேன்.இதில் என்ன தவறு இருக்கிறது? கேரளத்தில் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் பயங்கரமான மோதல். பினராயி விஜயனை ஆர்எஸ்எஸ்-காரர் என்றே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சிக்கிறார். ஆனால், இந்தியா கூட்டணியில் காங்கிரஸும் உள்ளது, மார்க்சிஸ்ட்டும் உள்ளது.மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கும் காங்கிரஸுக்கும் மோதல். ஆனால், இந்தியா கூட்டணியில் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள்.தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அரசியல் நடக்கக் கூடாதா? இதனை இந்த திருமாவளவன் சொன்னால் உங்களால் புரிந்துகொள்ள முடியாதா?" என்று தெரிவித்தார்.விஜய்யின் வெற்றி நிற்காது, நிலைக்காது; அது ஒரு கானல் நீர்! அதிமுகWhy shouldn't TVK and DMK come together in the same alliance? asks VCK Cheif Thol. Thirumavalavan