இந்திய குடும்பங்களில் அதிகரிக்கும் கடன்கள்: ரிசர்வ் வங்கி

Wait 5 sec.

இந்திய குடும்பங்கள் கடன் தேவை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நிதி நிலைத்தன்மை அறிக்கையின்படி, 2025 - 2026 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் இந்திய குடும்பங்களின் மொத்த கடன் அளவானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் (GDP) 45.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தோராயமாக ரூ. 161 லட்சம் கோடி.வீட்டுக் கடன், வாகனக் கடன், நகைக் கடன் உள்ளிட்ட சில்லறைக் கடன்களின் தேவை அதிகரிப்பே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதுவே கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச அளவாகும்.இந்திய குடும்பங்களின் மொத்த கடனை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், 45.5 சதவிகிதத்துடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 87.3 சதவிகிதத்துடன் தாய்லாந்து முதலிடத்திலும், 69.9 சதவிகிதத்துடன் மலேசியா இரண்டாமிடத்திலும், 59 சதவிகிதத்துடன் சீனா மூன்றாமிடத்திலும் உள்ளன.இந்திய குடும்பங்களின் கடன் சுமை அதிகரித்தபோதிலும், கடன் பெற்ற்வர்கள் திருப்பிச் செலுத்தும் திறனும் தொடர்ந்து மேம்பட்டு வருவதாக அறிக்கையில் கூறுகிறது.கூகுள் போட்டோஸில் விடியோ எடிட் செய்யலாம்! எப்படி தெரியுமா?India’s household debt is at 45.5% of GDP