திமுக - அதிமுக ஒன்றிணையுமா? எந்தக் கூட்டணியும் நியாயமே! டிடிவி தினகரன் பதில்

Wait 5 sec.

திமுக - அதிமுக குறித்த கேள்விக்கு அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் சேர்க்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் பேசியதாவது, "பாஜகவை எதிர்ப்பதற்காக தவெகவும் திமுகவும் ஒரே அணியில் வர வேண்டும் என திருமாவாளவன் கூறியிருப்பதை அரசியல் கருத்தாகவே நான் பார்க்கிறேன்.அதேபோல, திமுகவும் அதிமுகவும் ஒன்றிணையுமா என்ற கேள்வி எழுப்புகிறீர்கள். ஆனால், அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்றுசேர்க்கும்.இதனை நாம் கடந்த காலங்களிலும் பார்த்துள்ளோம். அண்ணாவும் ராஜாஜியும் ஒன்று சேர்ந்ததுபோல பல முன்னுதாரணங்கள் உள்ளன.திமுக கூட்டணியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுத்து அமைச்சரவையில் இடமளித்து, தவெக கூட்டணியில் வைத்துக்கொள்வது நியாயமெனில், எந்தக் கூட்டணியும் நியாயம்தான்.இந்தத் தேர்தலில் விஜய் 35 சதவிகிதம் வாக்குகள் வாங்கியுள்ளார். 108 இடங்களை வென்றதால் அவர் பலம் பொருந்திய கட்சி என்று நீங்கள் பார்த்தால், அதனை வீழ்த்துவதற்கான வியூகத்தை வருங்காலத்தில் மற்ற கட்சிகள் எடுப்பதில் தவறேதுமில்லையே" என்று தெரிவித்துள்ளார்.தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்Will DMK and AIADMK unite? TTV Dhinakaran