மோடி ஆட்சியின்கீழ் 25 கோடி பேரை வறுமையில் இருந்து வெளிவந்துள்ளனர்: நியூஸி. பிரதமர்

Wait 5 sec.

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின்கீழ் 25 கோடி பேர் வறுமையிலிருந்து முன்னேறியுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் கூறியுள்ளார்.இந்தியா - நியூஸிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்த நிகழ்ச்சியில் நியூஸி. பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் பேசியதாவது, நான் இந்தியாவின் பெரிய ரசிகராக நீண்டகாலமாக இருந்து வருகிறேன். என் இருபது வயதுகளில் யூனிலீவர் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக இந்தியாவுக்குச் சென்றேன். இது இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களில் ஒன்றாகும்.1990-களில் இந்திய மக்கள் பெரும்பாலும் குறைந்தளவிலேயே ஊதியம் பெற்று வந்தனர்.ஆனால், நரேந்திர மோடி ஆட்சியின்கீழ், தற்போது 25 கோடி பேர் வறுமையிலிருந்து வெளிவந்துள்ளனர். தற்போது 44 கோடி பேர் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், அடுத்த 10 ஆண்டுகள் முடிவில் 75 கோடியாக மாறுவர். இது ஒரு நம்பமுடியாத மாற்றம்.இந்தியாவுக்கு பலமுறை பயணம் செய்த ஒருவர் என்ற முறையில் நான் கண்டது என்னவெனில், குறைந்த வருமானத்திலிருக்கும் ஒருவர் நடுத்தர அல்லது உயர் வருமானத்துக்கு முன்னேறுவதைக் காண்பதும், நடக்கும் மாற்றங்களும் ஊக்களிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நியூஸிலாந்து சென்றடைந்ததன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தாக்கப்படாது: ஈரான் அறிக்கை வெளியிட அமெரிக்கா கெடு250 million people have been lifted out of poverty under Modi's leadership, says New Zealand PM Christopher Luxon