தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்

Wait 5 sec.

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்தநாளையொட்டி, முதல்வர் ச. ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, முதல்வரின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகுமுத்துகோன், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர்.அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்" என்று கூறியுள்ளார்.தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்Azhagu Muthukone sacrificed his very life for the country, says CM Vijay