வயநாடு நிலச்சரிவில் மாயமானவர்களைத் தேடும் பணிகள் 4 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் வயநாடு மாவட்டத்திலுள்ள, மெப்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின் மூலம் பலியான இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 6 ஆக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பேரிடரில் மாயமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நில அளவையாளர் ராகேஷ் குச்சாய்த் மற்றும் கட்டுமான மேலாளர் விக்ரம் ரானா ஆகியோரைத் தேடும் பணிகள் 4 ஆவது நாளான இன்றும் நடைபெற்று வருகின்றன. மாயமான இருவரும் அங்கு பணியாற்றி வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து இந்தத் தேடுதல் பணியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு! 21வது நாளாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டம்! It has been reported that search operations for those missing in the Wayanad landslides are continuing for the fourth day.