திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதான நகராட்சி நிருவாகத் துறை முறைகேடு வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள்:நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நியமன முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோருக்கு எதிராக அதிமுக எம்.பி. ஐ.எஸ். இன்பதுரை தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. பாஜக பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஆள்கொணர்வு வழக்குகளும் பள்ளிக்கரணை சதுப்பு நில குடியிருப்பு விவகாரம் தொடர்பான இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI) தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வில் டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு மற்றும் யானைகள் வழித்தட பாதுகாப்பு குறித்த வழக்குகள்உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், லீமா ரோஸ், விஜய் தாமு உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகளும் இன்று விசாரணைக்கு வருகின்றன. Cases are scheduled for hearing at the Madras High Court today July 10கர்ப்பம்: சிக்கல்களுக்கு 3 காரணங்கள்! எந்தெந்த வாரங்களில் பரிசோதனை அவசியம்?