கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! வெளியேற்றப்படும் செய்தியாளர்கள்!

Wait 5 sec.

முதல்வர் விஜய் பங்கேற்கும் கரூர் நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியின் அரங்கில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். முதல்வரான பிறகு விஜய் இன்று முதல்முறையாக கரூர் செல்கிறார். கடந்த ஆண்டு கரூர் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். இதற்காக கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்த முதல்வர் ஜோசப் விஜய், சாலை வழியாக கரூர் செல்கிறார். கரூா் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் 5,000 போ் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறாா். இந்த நிகழ்ச்சியில் ஊடகங்கங்களுக்கு அனுமதி இன்று மறுக்கப்பட்டிருக்கிறது. கரூர் ஆட்சியர் சார்பில் செய்தியாளர்களுக்கு தனி பாஸ் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.கரூர் நிகழ்ச்சி அரங்கில் இருந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் நேரடியாக அங்கு வந்து ஊடகவியலாளர்களை வெளியேற அறிவுறுத்தி வருகிறார்.Media denied access to the Karur event; Journalists being removedகரூர் புறப்பட்டார் முதல்வர் ஜோசப் விஜய்