கரூர் பலி: அரசுப் பணி வழங்கலாம்; ஆனால்...! மதுரைக் கிளை முக்கிய உத்தரவு!

Wait 5 sec.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில் இன்று வழங்கப்படும் அரசுப் பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு செப். 27 ஆம் தேதி தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் தலைமையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அவர்களுக்கு அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் நிதியுதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 32 பேருக்கு இன்று கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், அரசுப் பணி ஆணை வழங்கவுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேநேரத்தில் இன்று வழங்கப்படுவது, தற்காலிகமாக பணி நியமன ஆணையாக மட்டுமே இருக்க வேண்டும், இந்த வழக்கு முடியும்வரை இப்படியே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் விஜய் தற்போது கரூர் நிகழ்ச்சிக்கு பயணத்தில் இருப்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்பதால் இப்போது தற்காலிக அரசுப் பணி வழங்கட்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். karur stampede: Govt job could be granted but one condition: Madurai HC Bench