திருச்சி டூ கரூர்! சாலை வழியாக செல்லும் முதல்வர் விஜய்! வழிநெடுங்கிலும் மக்கள் வரவேற்பு!

Wait 5 sec.

திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு, வழிநெடுங்கிலும் ஆங்காங்கே மக்கள் திரண்டு வரவேற்பு அளித்து வருகின்றனர்.முதல்வரான பிறகு விஜய் இன்று முதல்முறையாக கரூர் செல்கிறார். கடந்த ஆண்டு கரூர் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கவுள்ளார்.இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்வர் ஜோசப் விஜய், சாலை வழியாக கரூர் சென்று கொண்டிருக்கிறார்.இந்த நிலையில், கரூர் செல்லும் வழியில் ஆங்காங்கே தவெகவினரும், மக்களும் கூடி முதல்வர் விஜய்க்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.மக்கள் அதிகளவில் கூடியிருக்கும் இடங்களில் காரிலிருந்தவாறு மக்களின் வரவேற்பை முதல்வர் விஜய் ஏற்கிறார்.Trichy to Karur - Chief Minister Vijay travels by road! People welcome him all along the wayசென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 10) எந்தெந்த வழக்குகள் விசாரணை?