கயல் தொடரில் புதிய குடும்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், அந்தத் தொடரின் கதையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.சன் தொலைக்காட்சியில் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார். கயல் தொடர் 1500 எபிசோடுகளை நெருங்கியுள்ளது.கயல் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் தொடர், திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.தந்தையை இழந்த கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணுக்கு வரும் அனைத்து தடைகளையும் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதை மையப்படுத்தி கயல் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கயல் தொடரின் கதைக்களத்தில் புதிய பாத்திரங்களை தொடர் குழு அறிமுகம் செய்யவுள்ளது. இதனால், கதையில் பெரிய திருப்பம் ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் தொடரில், சக்திவேல் தொடர் நடிகை அவள் சந்தியா, ராஜா ராணி - 2, சண்டக்கோழி உள்ளிட்ட நடிகர்களில் நடித்து பிரபலமான ரியா விஸ்வநாதன், எங்கேயும் எப்போதும், ரம்மி, சீமத்துரை உள்ளிட்ட படங்கள் மற்றும் சிங்கப்பெண்ணே, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட தொடர்களில் நடித்த நடிகை பேபி ஜாய்ஸ் உள்ளிட்ட பலர் புதிதாக நடிக்கவுள்ளனர். 5 ஆண்டுகளுக்கும் மேலாக, கயல் தொடரின் கதை ஒரே விதமாக நகர்வதால், தொடரின் ஸ்வாரசியத்தை கூட்டுவதற்காக, புதிய பாத்திரங்களை தொடர் குழு அறிமுகம் செய்துள்ளது.A new family is set to be introduced in the Kayal series, bringing a twist to the storyline.கயல் தொடரில் மறைந்த சுபாஷினிக்குப் பதில் ரோஜா சீரியல் நடிகை!