அமெரிக்காவைப் பந்தாடிய பெல்ஜியம்! 4 - 1 கோல் கணக்கில் வெற்றி!

Wait 5 sec.

அமெரிக்கா - பெல்ஜியம் இடையேயான போட்டியில் 4 - 1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வென்றது.ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், பெல்ஜியம் - அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி பிலடெல்பியாவில் நடைபெற்றது.போட்டி தொடங்கியது முதலே பெல்ஜியம் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தது. அமெரிக்காவின் தடுப்பாட்டத்தையும் மீறி 9-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் லோயிஸ் ஓபெண்டா முதல் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார்.கெவின் டி ப்ரூய்னின் அபாரமான ஆட்டத்தால் தொடர்ந்து பெல்ஜியம் ஆதிக்கம் செலுத்தியது. அமெரிக்க அணி கொடுத்த சிறு இடைவெளிகளை கூட துல்லியமாகப் பயன்படுத்திக் கொண்டனர் பெல்ஜியம் வீரர்கள்.ஆனால், 31வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. அந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. வெறும் இரு நிமிடங்களில் 33-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் சார்லஸ் டி கெட்டலேரே 2-வது கோலை அடித்தார்.இரண்டாம் பாதியின் 57வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் லோயிஸ் ஓபெண்டா மற்றொரு கோலை அடித்து அணியின் கோலை 3 ஆக உயர்த்தினார். ஆட்டத்தின் முடிவில் 90+3 நிமிடங்களில் ரொமேலு லுகாகு இறுதி கோலை அடித்து, பெல்ஜியத்தின் கணக்கை 4-ஆக உயர்த்தி ஆட்டத்தை முடித்து வைத்தார்.இதன்மூலம், பெல்ஜியம் அணி 4 - 1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதியில் ஸ்பெயின் அணியுடன் பெல்ஜியம் மோதவுள்ளது. Belgium won the match against the United States with a score of 4–1.போர்ச்சுகலை வென்றது ஸ்பெயின்! ரோனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது!