வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

Wait 5 sec.

வயநாடு மாவட்டம் கல்லாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை பெரியளவிலான நிலச்சரிவு ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வயநாடு மாவட்டம், மெப்பாடி அருகிலுள்ள கல்லாடியில் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் அனக்கோம்பொயில் - மெப்பாடி சுரங்கப்பாதை சாலைத் திட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் மீனாட்சி பாலம் அருகே இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த நிலச்சரிவில் சிலர் மண்ணுக்குள் புதைந்ததாக அச்சம் நிலவுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.சுரங்கப்பாதை அமைக்கும் பணியாளர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து உள்ளுர் மக்கள் உதவியுடன் இதுவரை ஐந்து பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் சில வீடுகளும், விடுதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சுரங்கப்பாதை பணியாளர்களை ஏற்றிச் செல்லும் சில வாகனங்களும் நிலச்சரிவில் சிக்கியுள்ளன.தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.கேரள அமைச்சர் டி. சித்திக் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்தில் தேடுதல் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.கடந்த 2024 ஆம் ஆண்டு, வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 250-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.A landslide at the Kalladi tunnel work site in #Wayanad blocked the road and injured 5 people. They have been taken to the hospital. No deaths have been reported. Work at the site had already been stopped because of heavy rain. The area received 265 mm of rain in the last 24… pic.twitter.com/3LrpPhR0gM— Ashish (@KP_Aashish) July 7, 2026Landslide in Wayanad! Intensive efforts underway to rescue those trapped!பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது!