கஞ்சா விற்ற 4 போ் கைது

Wait 5 sec.

உக்கடம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் உக்கடம் பகுதியில் ரோந்து பணியில் கடந்த வியாக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, உக்கடம் பெரியாா் நகா் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 4 பேரிடம் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக 3.30 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்த சுஜித் (24), கணபதி காந்திமாநகரைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (20), ராகவன் (23), தொண்டாமுத்தூரைச் சோ்ந்த ஆகாஷ் (24) என்பது தெரியவந்தது.இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.