வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்?

Wait 5 sec.

வியத்நாமில் சுற்றுலாப் படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலா இடமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 படகு ஊழியர்களும் இருந்தனர். இன்று பகல் 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான படகில் சுமார் 20 தமிழர்கள் இருந்திருக்கின்றனர். இவர்களில் பலரும் லாவா மொபைல் நிறுவனத்தின் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.வியத்நாம் படகு விபத்து! பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் யார் யார்? முழு விவரம்...இந்த நிலையில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வியத்நாமிற்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் இறந்தவர்களில் 3 பேர் ஆந்திரம், 2 பேர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான தமிழர்கள் முழு விபரம்:1. செந்தில் குமார்2. முருக பிரபு3. ஸ்ரீதர்4. ஷேக் அப்துல்லா5. பாலாஜி6. வினய குமார்7. ரவிசங்கர்8. சந்தோஷ் குமார்9. பாபு10. அழகுராஜன்.உதவி எண்கள் அறிவிப்புவியத்நாம் படகு விபத்து தொடர்பாக ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும், ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள +84 91 308 9165 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.வியத்நாம் படகு விபத்து வருத்தமளிக்கிறது: லாவா நிறுவனம் அறிக்கை!Fifteen people, including 10 from Tamil Nadu, have been killed in a tourist boat accident in Vietnam.