இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.ஜோஸ் பட்லர் சதம் விளாசல்; இந்தியாவுக்கு இமாலய இலக்கு!முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். பில் சால்ட் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லருடன் கேப்டன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியில் மிரட்டியது. அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் சதம் விளாசி அசத்தினார். அவர் 64 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடியில் கலக்கிய கேப்டன் ஹாரி ப்ரூக் 45 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். வில் ஜாக்ஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.இந்தியா தரப்பில் ஷிவம் துபே இரண்டு விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.Batting first in the final T20 match against India, the England team scored 257 runs for the loss of 3 wickets.தன்சித் ஹாசன், சௌமியா சர்க்கார் அசத்தல்; வங்கதேசத்துக்கு ஆறுதல் வெற்றி!