இந்தியளவில் தன் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த பாடகி எஸ். ஜானகி காலமானார். இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்தவர் எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது திடீர் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 1957 ஆம் ஆண்டு விதியின் விளையாட்டு என்கிற திரைப்படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் எஸ். ஜானகி. அதே ஆண்டிலேயே 6 மொழிகளில் பாடி வலுவான தொடக்கத்தைக் கொடுத்தார். பின், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, உருது உள்பட பல இந்திய மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ஒவ்வொரு மொழியிலும் தனக்கான லட்சக்கணக்கான ரசிகர்களையும் பெற்றார். தமிழில் பாடும் பாடலைத் தமிழிலேயே வைத்துக் கொண்டும், தெலுங்கில் பாடும்பொழுது தெலுங்கிலும், இந்தியில் பாடும் பொழுது இந்தியிலும், மற்ற மொழிகளில் பாடும் பொழுது தெலுங்கிலும் எழுதி வைத்துக்கொண்டு பாடுவதையே வழக்கமாக வைத்திருந்தார். இசையமைப்பாளர்கள் எம். எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஜானகி 60 ஆண்டுகாலம் பல மொழிகளின் இசை தலைமுறைகளைக் கண்ட ஜானகி இறுதியாக, 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்து கல்பனகள் (pathu kalpanakal) திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘அம்மபூவினும்’ (ammapoovinum) பாடலைப் பாடியதுடன் இனி பாடுவதில்லை என முடிவு எடுத்தது குறிப்பிடத்தக்கது. ‘ராமு, நான் ரெடி’ கணவரை பெயர் சொல்லி அழைக்கும் பாடகி எஸ். ஜானகி!Singer S. Janaki, who captivated millions of fans across India with her voice, has passed away.