ஆஸ்கர் வென்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ’தி ஒடிஸி’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க இந்தியா வந்தடைந்ததுள்ளார். உலகின் மிகச்சிறந்த இயக்குநராக கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் தற்போது ஒடிசி என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.பிரபல கவிஞர் ஹோமர் எழுதிய ஒடிசி என்கிற கவிதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய கவனத்தைப் பெற்றுள்ளதால் வெளியீட்டில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க மும்பை வந்தடைந்துள்ள கிறிஸ்டோபர் நோலன் தாஜ் மஹால் விடுதியில் தங்கியிருக்கிறார். இந்தப் படத்தின் நாயகன் டாம் ஹாலண்ட்டும் மும்பைக்கு வந்திருக்கிறார். அவர் விடுதிக்குச் செல்லும் முன்பாக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு கையசைத்து ஆட்டோகிராஃப் கொடுத்துவிட்டும் சென்றது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.முன்னதாக 2020ல் தனது டெனன்ட் படத்தின் படப்பிடிப்பை மும்பையில் படமாக்கியது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக இந்தியாவில் நோலனின் படம் சிறப்புக் காட்சியில் வெளியாகவிருக்கிறது. மும்பை பிவிஆர் ஐகான் ஐமேக்ஸ் திரையரங்கில் இந்தப் படம் சிறப்புக் காட்சியாக வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் முழுவதும் ஐமேக்ஸ் காமிராவில் படமாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அன்னா ஹீத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா ஞயாங்கோ, ஜென்டாயா, சார்லி திரோன் மற்றும் சமந்தா மோர்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். Christopher Nolan and the star-studded cast of ‘THE ODYSSEY’ at the Paris Premiere.Nolan was joined by Matt Damon, Anne Hathaway, Tom Holland, Zendaya, Lupita N’yongo, Charlize Theron, and John Leguizamo for a 70mm screening at the Grand Rex theatre. pic.twitter.com/rCpZCFiH1W— Filmthusiast (@itsfilmthusiast) July 10, 2026Hollywood's legendary filmmaker #ChristopherNolan arrives in Mumbai to promote his film #TheOdyssey https://t.co/5ZEcUFgwpB pic.twitter.com/Z9rkNvI2fG— M4MOIVES (@M4MOIVES) July 10, 2026சிறுமியின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தியதால் விநாயகன் மீது வழக்குப் பதிவு!Christopher Nolan, Tom Holland arrive in Mumbai for 'The Odyssey' premiere