இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தனது 300-வது சர்வதேசப் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் திடலில் முதல் முறையாக மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.3️⃣0️⃣0️⃣ international matches of class & elegance Congratulations to #TeamIndia vice-captain Smriti Mandhana on a special & monumental milestone #ENGvIND pic.twitter.com/r9HnNZZYe0— BCCI Women (@BCCIWomen) July 10, 2026மதிய உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா களத்தில் விளையாடி வருகின்றனர்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 300-வது சர்வதேச போட்டியாகும். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.உணவு இடைவேளையின்போது, ஸ்மிருதி மந்தனா 67 பந்துகளில் 56 ரன்கள எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.Indian team vice-captain Smriti Mandhana impressed by scoring a half-century in her 300th international match.சூர்யவன்ஷிக்காக சஞ்சு சாம்சனை நீக்கியது சரியா? முன்னாள் வீரர் கூறுவதென்ன?