முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக

Wait 5 sec.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்பட்டிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் தற்போது 31 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, "கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் அரசுப் பணி ஆணை வழங்கியுள்ளார். நானும் அதற்கு வரவேற்பளித்தேன்.இதனைப்போல சாலை விபத்தில் உயிரிழந்தோர், மின்சாரத் துறையில் வாரிசு அடிப்படையில் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டியுள்ளது, போக்குவரத்துத் துறையிலும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டியுள்ளது, வருவாய் மற்றும் கூட்டுறவுத் துறையில் பணியாற்றியபோது உயிரிழந்தோரின் வாரிசுகள் என ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.குரூப் 1, டெட் போன்ற தேர்வுகளுக்காகப் படித்து, கடினமாக உழைத்தவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கும் முன்னரே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கரூர் சம்பவம் தொடர்பாக அரசுப் பணி கொடுக்கப்பட்டதில் தவறில்லை.இவர்களின் (தவெக) கூட்டத்தில் இறந்தவர்களுக்கு கொடுப்பதைப் பார்த்தால், இதில் சுயநலம் இருப்பது தெரிகிறது" என்று தெரிவித்தார்.முதல்வரின் கொத்து பரோட்டா - திமுக தலைவர்களின் சால்னா! வைரலாகும் பேச்சுகள்!The issuance of appointment orders to the families of those who lost their lives in the Karur stampede amounts to bribery,says BJP Chief Nainar Nagenthran