நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் சூப்பர்ஹீரோ படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தின் மூலம் வில்லனாக புகழ்பெற்றார் அர்ஜுன் தாஸ். பின்னர், நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் குறைவாகவே வெளியாகியுள்ளன. மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான மின்னல் முரளி திரைப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.மிஷ்கினின் முகமூடி, சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆகிய திரைப் படங்கள் மட்டுமே அவ்வாறான கதைக் களத்தில் உருவாகியுள்ளன. இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் இந்த வரிசையில் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் சாண்டி, தேஜு அஸ்வினி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விக்னேஷ் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸுக்குப் பிறகு வெளியாகுமென கூறப்பட்டுள்ளது.#Superhero ♥️ pic.twitter.com/mqy4K649vE— Arjun Das (@iam_arjundas) July 10, 2026சிறுமியின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தியதால் விநாயகன் மீது வழக்குப் பதிவு!Arjun Das SuperHero - Third Look Poster out now