முட்டை விலையில் மேலும் 5 காசுகள் அதிகரிப்பு! விலை உயர்வு நாளை முதல் அமல்

Wait 5 sec.

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சமாக ரூ. 6.55-ஆக உயர்ந்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ள நிலையில், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுதான் நிா்ணயம் செய்கிறது.இதனிடையே, மேற்காசிய போர் ஏற்பட்டதால் கோழி தீவன மூலப்பொருள்களின் விலை உயர்வு, வெளிநாடு ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் சமீபகாலமாக முட்டையின் விலை உயர்ந்து, கொள்முதல் விலையாக ரூ. 6.50 என்று உயர்ந்தது.இந்த நிலையில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் இதுவரையில் இல்லாத உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.55 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், பெரும்பாலான கடைகளில் சில்லறை விற்பனையில் தற்போது ரூ. 8 என்றிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு நாளை (ஜூலை 11) முதல் அமலுக்கு வரவுள்ளது.முதல்வரின் கொத்து பரோட்டா - திமுக தலைவர்களின் சால்னா! வைரலாகும் பேச்சுகள்!Egg price rises to a new high of Rs. 6.55