வேலூர் மாவட்டம், குடியாத்தம், கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் ஆனிமாத பால்குடப் பெருவிழா ஜூலை10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும். காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் ஜூலை 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணியளவில் தங்கத் தேர் திருவிழா நான்கு ராஜவீதியில் நடைபெறும்.வேலூர் மாவட்டம், குடியாத்தம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஜூலை12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேய்பிறை பிரதோஷ விழா மாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை நடைபெறும். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், ஸ்ரீ புஷ்பவனநாதர் உடனுறை ஸ்ரீ சௌந்தரநாயகி தாயார் கோயிலில் ஜூலை 12 }ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உழவாரப்பணி நடைபெறுகிறது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில், ஆதீன முதற்குரவர் ஸ்ரீலஸ்ரீ பாலசித்தர் மகா குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது குருமூர்த்தத்துக்கு ஜூலை 13}ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு அபிஷேக ஆராதனைகள், அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தவசு திருவிழா ஜூலை 18 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூலை 29}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான தவசுக்காட்சி ஜூலை 28 }ஆம் தேதி மாலை 6.05 மணிக்கும், இரவுக்காட்சி 11.45 மணிக்கும் நடைபெறும்.தஞ்சாவூர் மாவட்டம், பெருவுடையார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மஹா வாராஹி அம்மனுக்கு 24}ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரிப் பெருவிழா ஜூலை 13}ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.தஞ்சை மூலை அனுமார் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு ஜூலை 14}ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவிலும், மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், பாரியூர், வெள்ளாள பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சிவகாமி அம்மை உடனுறை ஸ்ரீமத் ஆனந்த நடராஜப்பெருமான் கோயிலில் திருவாதிரை கட்டளை பூஜை, எம்பிரான் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் முற்றோதுதல் ஜூலை 13}ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கும், சத்ரு சம்ஹார சஷ்டி வேல் பூஜை ஜூலை 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.