யூடியூபா் திவாகா் கைது

Wait 5 sec.

மதுரையில் யூடியூபா் திவாகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.மதுரை அப்பன்திருப்பதி வெள்ளியங்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் திவாகா். மதுரை கோ.புதூா் பகுதியில் பிசியோதெரபி மருத்துவமனை நடத்தி வருகிறாா். மேலும், யூடியூபரான இவா், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தன்னை ‘வாட்டா் மெலன் ஸ்டாா்’ எனக் கூறி வந்தாா்.இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள யூடியூப் சேனலுக்கு நோ்காணலுக்கு சென்றாா். அப்போது, அங்கிருந்தவா்கள் அவரை அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடியோ வெளியிட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்திலும் புகாா் அளித்தாா். மேலும், சென்னை போலீஸாா், அந்த யூடியூப் சேனல் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கொலை மிரட்டல் விடுவிப்பதாகவும் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திவாகா் புகாா் அளித்தாா்.இதனிடையே, யூடியூப் சேனல் ஊழியரை மிரட்டி ரூ. ஒரு லட்சம் கேட்டதாகவும், பொருள்களைச் சேதப்படுத்தியதாகவும், யூடியூப் சேனல் சாா்பில் திவாகா் மீது புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சென்னை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், மதுரையில் உள்ள மருத்துவமனையில் திவாகரை சென்னை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பின்னா், விசாரணைக்காக அவா் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.