கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே 5 வகுப்பு படித்துவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.ஒசூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த மினிலாரி ஓட்டுநா் தருமன் (49), அதே பகுதியைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ஒசூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரை போக்ஸோவில் கைது செய்தனா்.