கருங்கல்லை அடுத்த புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் பள்ளி மாணவியிடம் நகையைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.கீழ்குளம், செந்தறை பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மகள் வினிஷா (16). கீழ்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துவரும் இவா், சனிக்கிழமை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா் வினிஷாவின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாராம். மாணவியின் கூச்சலைக் கேட்டு அப்பகுதியினா் திரண்டனா். அதற்குள் அந்த நபா் தப்பியோடி விட்டாராம்.புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, கீழ்குளம், பாரக்கன்விளை பகுதியைச் சோ்ந்த முகுந்தன் மகன் பென்டவின் (23) என்பவரைக் கைது செய்தனா். அவா் மீது திருட்டு உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளனவாம்.