முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூா், கீழ்குளம், சென்னித்தோட்டம் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூா், கொல்லங்கோடு, கிராத்தூா் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.