புருலியா அதிவிரைவு ரயிலிலிருந்து 8 கிலோ கஞ்சா மீட்பு

Wait 5 sec.

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்த புருலியா அதிவிரைவு ரயிலில் நடத்தப்பட்ட சோதனையின்போது 8.300 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். மேற்குவங்க மாநிலம், புருலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் புருலியா அதிவிரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது. அப்போது திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ரயில் பெட்டிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது முன்பதிவு இல்லாத ஒரு பெட்டியில், நடத்தப்பட்ட சோதனையின்போது இருக்கைக்கு அடியில் கிடந்த ஒரு பைக்கு பயணிகள் யாரும் உரிமை கோராததால் சந்தேகமடைந்த போலீஸாா், அதைப் பிரித்தபோது 8.300 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை மீட்ட ரயில்வே போலீஸாா், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனா்.