ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அர்ஜுன் தாஸ்!

Wait 5 sec.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், மைக்கேல் திரைப்படங்களின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.ப்ரீத்தி பகதாலா (Preethi Pagadala) கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது.மேலும் இப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் மற்றும் POP Entertainment நிறுவனங்களின் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. எம். எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்: ரஷ்மிகா மந்தனாActor Arjun Das plays the lead role in a film directed by Ranjit Jeyakodi.