ஆடவருக்கான ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிரண்டு இடத்தைப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என வென்றுள்ளது. கடைசி டி20 போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2024, 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. அடுத்தாக 2028 உலகக் கோப்பையையும் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் அசத்திய அபிஷேக் சர்மா ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இஷான் கிஷன் முதலிடத்தில் நீடிக்கிறார். டாப் 10ல் மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளார்கள். ஜாஸ் பட்லர் திலக் வர்மாவை முந்தி ஏழாவது இடம் பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிராக பட்லர் சிறப்பாக விளையாடினார்.இந்தியாவின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் நான்கு இடங்கள் முன்னேறி 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை 1. இஷான் கிஷன் - 913 புள்ளிகள் 2. அபிஷேக் சர்மா - 862 புள்ளிகள்3. சஹிஜதா ஃபர்ஹான் - 848 புள்ளிகள் 4. பில் சால்ட் - 799 புள்ளிகள்5. டெவால்ட் பிரெவிஸ் - 789 புள்ளிகள்2018 மணல் காகித மோசடி நிகழ்வுகளை மறக்க நினைக்கும் ஸ்டீவ் ஸ்மித்! ICC T20 Rankings: Indian players secure the top two spots!