எம். எஸ். சுப்புலட்சுமியாக நடிப்பது கஷ்டம்: கமல் ஹாசன்

Wait 5 sec.

நடிகர் கமல் ஹாசன் எம். எஸ். சுப்புலட்சுமி திரைப்பட அறிமுக விழாவில் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. மறைந்த கர்நாடக இசைக்கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கைக் கதையில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இப்படத்தை கௌதம் தின்னுரி இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். சென்னையில் நேற்று (செப். 16) நடைபெற்ற தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கிளாப் அடித்து இத்திரைப்படத்தை தொடங்கி வைத்தார்.நிகழ்வில் பேசிய நடிகர் கமல் ஹாசன், “தென்னிந்திய சினிமாவை எப்படி காண வேண்டும் என நினைத்தோமோ அப்படி வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு மாநிலங்களிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டிய அவசியமில்லாத சூழலும் உருவாகியிருக்கிறது. தென்னிந்திய சினிமாவுக்கு சென்னை அடையாளமாக இருந்தது. அது பெங்களூருவாக, ஹைதராபாத்-ஆகவும் மாற வேண்டும். நாமெல்லாம் ஒரே குடும்பம்தான். என்னால் மீண்டும் அவ்வை சண்முகியாக நடிக்க முடியும். ஆனால், என் தாடியை எடுத்தாலும் எம். எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க முடியாது. அதை நீங்கள்தான் (ரஷ்மிகா மந்தனா) செய்ய வேண்டும். கிடைத்த வாய்ப்பிற்கு உயிரைக் கொடுத்து நடிக்காமல் உழைப்பைக் கொடுத்து நடிக்க வேண்டும்.” எனக் கூறினார். முதலில், இப்படத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ராஷ்மிகா நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.பா. இரஞ்சித்தின் வேட்டுவம் அப்டேட்!Actor Kamal Haasan's speech at the launch event of the M.S. Subbulakshmi film has drawn attention.