அடக்கி வாசிங்க! திமுகவின் தயவால்தான் காங்., விசிக, முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது! அன்புமணி

Wait 5 sec.

மக்கள் தங்களுக்ளு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று தவெகவினர் மட்டும்தான் சொல்ல முடியும் என்றும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் சொல்ல முடியாது என்றும் பாமக தலைவர் அன்புமணி கூறினார். பெரியார் பிறந்தநாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அன்புமணி, "கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக கூட்டணியில் இருக்கிறார்களா, இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். கூட்டணியில் இருந்துகொண்டே இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுவது ஒரு குழப்பமான நிலைப்பாடு. ஆனால், இதில் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. விஜய்க்கு தான் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று தவெகவினர் மட்டும்தான் சொல்லலாம், சொல்ல முடியும். காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் எல்லாம் திமுக கூட்டணியில் போட்டியிட்டு திமுகவின் தயவால்தான் வெற்றி பெற்றார்கள். இப்போது தவெக பக்கம் வந்துவிட்டார்கள். அதன்பிறகு வீரவசனம் பேசுவது எல்லாம் அர்த்தமில்லை. அடக்கி வாசியுங்கள்" என்றார். Congress, VCK, and Muslim League won in elections with the help of dmk: Anbumaniகொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை அறிக்கை